நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 171 ↗வெஃகாமை
Kurals 171–180
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 171 ↗படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 172 ↗சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 173 ↗இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 174 ↗அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 175 ↗அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 176 ↗வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 177 ↗அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 178 ↗அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 179 ↗இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 180 ↗